பாதயாத்திரை பயணத்தின் மூன்றாவது நாள்

மாரான், மார்ச் 24 –

மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் 93 ஆம் ஆண்டு பங்குனி உத்தித் திருவிழாவையொட்டி, பத்துமலைத் திருத்தலத்திலிருந்து பாதயாத்திரை பயணத்தை பக்தபெருமக்கள், இன்று காலை மணி 6.00 மரத்தாண்டவர் ஆலயத்தை அடைந்துள்ளனர்

சிலாங்கூர், பத்து கெவ்ஸ் மெரோத்தோன் கலப் ஏற்பாட்டில் நடைபெற்ற கிழக்கை நோக்கி ஆன்மிகப்பயணமான இந்த பாதயாத்திரை, கோலாலம்பூரிலிருந்து மாரான் வரை 204 கிலோ மீட்டர் வரை நான்கு நாட்கள் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டு தங்களின் பிராத்தனைகளைப் பால் குடம் ஏந்தி முடித்துள்ளனர்.

17 ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த ஆன்மிகப்பயணத்தின் நிறைவு நிகழ்வு இன்றிரவு நடைபெறுகிறது. பாத யாத்திரை பயணத்தின் முக்கிய ஆதரவாளரான மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவரும், மூடா கட்சியின் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் R. சிவபிரகாஷ், நிகழ்வை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைப்பார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்