பாடு பதிவை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

புத்ராஜெயா, மார்ச் 18 –

பாடு எனப்படும் முதன்மை தரவுகள் தளத்தை நாடு முழுவதும் இன்னும் 4,752 இடங்களில் பதிவு செய்யப்படவில்லை மற்றும் இவற்றை பதிவு செய்ய தவறும் பொதுமக்கள் அரசாங்கம் வழங்குகின்ற உதவித்திட்டங்களை பெற தவறுகிறார்கள் என்று வலியுறுத்தப்படுகின்றது.

சிலாங்கூர் மாநிலத்தில் 1,282 இடங்களும் கோலாலம்பூரில் மொத்தம் 992 பகுதிகளும் பாடு திட்டத்தை பதிவு செய்யாமல் அதிக எண்ணிக்கையில் உள்ளடங்கியிருப்பதாக பொருளாதார அமைச்சர் ராபிசி ரம்லி தெரிவித்தார்.

கடந்த மார்ச் 17 ஆம் தேதி வரையில் 5.43 மில்லியன் நபர்கள் மட்டுமே பாடு தரவை புதுப்பித்துள்ளதாக ராபிசி ரம்லி கூறினார்.

அடுத்த இரண்டு வாரங்களில், மார்ச் 31 ஆம் தேதி வரையில் அமைச்சகம் மற்றும் பாடு குழுவினர்களின் முழுகவனமும் தனிநபர்கள், குடும்பங்களின் பாடு திட்டத்தை பதிவு செய்வதை மேம்படுத்துவதாக இருக்கும் என்று ராபிசி ரம்லி இன்று தெரிவித்தார்.

அரசாங்கம் வழங்குகின்ற உதவித்திட்டங்கள் யாவையும் கிடைக்க வேண்டும் என்றால் பாடு வில் பதிவு செய்ய தவறியிருக்கும் நபர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யுமாறு ராபிசி ரம்லி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்