பினாங்கு குடியிருப்பாளர்கள் நீர் விநியோகத்தை 10 சதவீதம் குறைக்குமாறு வலியுறுத்து

பினாங்கு, மார்ச் 18 –

பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து குடியிருப்புவாசிகளும் உடனடியாக நீர் விநியோகத்தை 10 சதவீதம் குறைக்குமாறு பினாங்கு நீர் விநியோக வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட அன்றாட தினசரி நீர் விநியோகம் 877 மில்லியன் லீட்டராக இருந்த வேளையில் இவ்வாண்டு சராசரி ஒருநாளைக்கு 927 மில்லியன் லீட்டர் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

இது கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் அதிகமாக இருப்பதுடன் இவற்றை கையாள்வதற்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி க்.பட்மனாதன் கூறினார்.

நீர் விநியோகத்தின் அதிகரிப்பு பினாங்கு மாநிலத்தில் நீர் பற்றாக்குறை சூழ்நிலையை சமாளிக்க விளைவாக அமையும் என்பதுடன் பாராட் டாயா, செபெராங் பெராய் செலாத்தான் ஆகிய மாவட்டங்களில் நீர் பற்றாக்குறை குறித்து பிரச்னைகள் எழுவதாகும் க.பட்மானாதன் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்