பாதயாத்திரை பயணத்தின் மூன்றாவது நாள்

மாரான், மார்ச் 23.

மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் 93 ஆம் ஆண்டு பங்குனி உத்தித் திருவிழாவையொட்டி, பத்துமலைத் திருத்தலத்திலிருந்து பாதயாத்திரை பயணத்தை தொடங்கியுள்ள, பக்தபெருமக்கள், மூன்றாவது நாளாக இன்று அதிகாலையில் பகாங், கம்போங் அவாஹ், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திலிருந்து ஜெங்கா 15 – ஐ நோக்கி நடக்கத் தொடங்கினர்.

சிலாங்கூர், Batu Caves Marathon Club ஏற்பாட்டில் நடைபெற்று வரும் கிழக்கை நோக்கி ஆன்மிகப்பயணமான இந்த பாதயாத்திரை, கோலாலம்பூரிலிருந்து மாரான் வரை 204 கிலோ மீட்டர் வரை நான்கு நாட்களை உள்ளடக்கிய பயணமாகும்.

இன்று பிற்பகலில் தாமான் ஜெங்கா இம்பியான் சமூக மண்டபத்தை வந்தடைய பாதயாத்ரீகர்கள், மதிய உணவுக்கு பிறகு இளைப்பாறிவிட்டு, இரவு உணவுக்கு பிறகு சமூக மண்டபத்திலேயே தங்குகின்றனர். அரசாங்க சார்பற்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் தன்னார்வாளர்கள் உதவியுடன் சமையல் வேலை நடைபெற்றது. Klang Group- பைச் சேர்ந்த எஸ்.எம் கண்ணன் இதற்கான செலவினத்தை ஏற்றுக்கொண்டார்.

17 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த ஆன்மிகப்பயணத்தின் நிறைவு நிகழ்வு இன்றிரவு நடைபெறுகிறது. பாத யாத்திரை பயணத்தின் முக்கிய ஆதரவாளரான மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவரும், மூடா கட்சியின் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் R. சிவபிரகாஷ், நிகழ்வை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைப்பார்.

பாதயாத்ரீகர்கள் நாளை அதிகாலையில் புறப்பட்டு, மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தை சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிகரமாக மூன்றாவது நாளை எட்டிப்பிடித்த விட்ட பாதயாத்ரீகர்களுக்கு தமது ஆதரவை புலப்படுத்திய டாக்டர் சிவபிரகாஷ், இந்த ஆண்டில் அதிகமானோர் பங்கு பெற்றது குறித்து பெருமிதம் தெரிவித்தார். அடுத்த ஆண்டில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்