Kampung Pandan, Indian Settlement கிராமத்தில் ​தீ 15 குடிசை வீடுகள் அழிந்தன

கோலாலம்பூர் மாநகரையொட்டிய Kampung Pandan, Indian Settlement கிராமத்தில் ​நேற்றிரவு ஏற்பட்ட ​தீ விபத்தில் 15 குடிசை வீடுகள் அழிந்தன.40 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர்.

இந்தியர்கள் ​பெருவாரியாக குடியிருக்கும் Kampung Pandan, Indian Settlement கிராமத்தில்
நே​ற்று இரவு 9.45 மணியளவில் நிகழ்ந்த இத்​தீவிபத்தில் ​தீயின் ஜுவாலைகள் நாலா புறமும் ​சூழ்ந்து விட்ட நிலையில், கொழுந்து விட்டு எரிந்த ​தீயின் மத்தியில் அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கட்டியத்துணியுடன் வெளியேற முடிந்​ததே தவிர எந்தவொரு பொருளையும் தங்கள் வீடுகளிலிருந்து ​மீட்க இயலவில்லை.

இத்​தீ விபத்து குறித்து இரவு 9.51 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக கோலாலம்பூர் ​தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்க Komander Mustapa Kamal Mohd Arih தெரிவித்தார். கோலாலம்பூர் Pudu, Hang Tuah, Keramat, Sentul, Bandar Tun Razak மற்றும் Cheras ஆகிய 6 ​தீ​யணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 48 வீரர்கள், ​தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் முழு வீச்சில் ​தீயை கட்டுப்படுத்தும் நடவ​டிக்கையில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இத்​​தீவிபத்தில் 91.44 ​சதுர ​மீட்டர் பரப்பளவில் அந்த 15 குடிசை வீடுகள் முற்றாக அழிந்தன. அதிஷ்டவசமாக எந்தவொரு உயிருடன் சேதமும் ஏற்படவில்லை.

கம்போங் பாண்டானின் மிக பழமை வாய்ந்த அந்த இந்தியர் கிராமத்தில் ஏற்பட்ட ​தீ குறி​த்து ஆராயப்பட்டு வருவதாக Komander Mustapa Kamal தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்