பினாங்கில் தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படும்

பினாங்கு மாநிலத்தில் விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் வீட்டிற்கான தண்ணீர் கட்டண உயர்வு தொடர்பில் அதற்கான விண்ணப்பத்தை புத்ராஜெயாவிடம் மாநில அரசாங்கம் சமர்ப்பிக்கவிருப்பதாக மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் வீட்டு பயனீட்டுக்கான தண்ணீர் கட்டண உயர்வு நீண்ட காலமாக மேற்கொள்ளப்படாமல் இருப்பதை மாநில மு தலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆகக்கடையிகா கடந்த 2015 ஆம் ஆண்டு வீட்டுப்பயனீட்டுக்கான தண்ணீர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர கடந்த எட்டு காலமாக எவ்வித கட்டண உயர்வையும் மாநில அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று பினாங்கு குடிநீர் விநியோக வாரியத்தின் தலைவருமான சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்திற்கு விநியோகிக்கப்படும் நீருக்கு மிகப்பெரியளவில் அரசு உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆயிரம் லிட்டர் நீரையும் சுத்திகரிப்பு செய்வதற்கு பினாங்கு குடிநீர் விநியோக வாரியம் தலா ஒரு வெள்ளிக்கும் அ திகமான தொகையை செலவிடுகிறது. ஆனால், அந்த நீரை தலா 30 காசுக்கு மட்டுமே விற்பனை செய்கிறது என்று சௌ கோன் இயோவ் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்