பினாங்கில் மீண்டும் நீர் வினியோகத் தடை !

பினாங்கில் சுங்கை பிறாயின் அடிப்பகுதியில் உடைந்த குழாயின் மாற்றுப் பணிகள் நடப்பதால், கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர்
நீர் விநியோக இடையூறுகளை சந்திக்க நேரிடும் என்று அம்மாநில முதலமைச்சர் Chow Kon Yeow கூறினார்.

பாராட் டாயா மாவட்டத்தில் உள்ள நீர் விநியோகத் தடையால் பயனர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்ட நிலையில், எப்போது வரையில் அப்பாதிப்பு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட வில்லை.

உடைந்த குழாய் வழியாக, பட்டர்வொர்த்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில், 3 முறை அக்குழாய் உடைந்தது என்பது குறிப்பிடதக்கது.

குழாய் மாற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், தற்காலிகமாக ஆற்றின் மேல் குழாய் நகர்த்தப்பட்டதாகவும் சோவ் கூறினார்.

மஇதற்கு முன்னர் நேர்ந்தது போல் நீர் விநியோகத் த்டை பெரிய அளவில் இருக்காது எனக் குறிப்பிட்ட CHOW. 16 மணி நேரம் மட்டும் மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்