பினாங்கில் 4 வாகனத்தை உட்படுத்திய சாலை விபத்தில் ஐவர் காயமடைந்தனர்.

பினாங்கு, மே 15-

பினாங்கு, ஜார்ஜ் டவுன்-னிலுள்ள துன் டாக்டர் லிம் சோங் ஏவ் நெடுஞ்சாலையில் நேற்றிரவு நிகழ்ந்த 4 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் ஐவர் காயங்களுக்கு இலக்காகினர்.

டொயோட்டா எஸ்டிமா, பெரோடுவா பெஸ்ஸா, பி.எம்.டபிள்யூ ஆகிய வாகனங்களுடன் மொடெனாஸ் ரக மோட்டார்சைக்கிளை உட்படுத்தி அந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இரவு மணி 11.35 அளவில் அவசர அழைப்பை பெற்றதை அடுத்து, தீயணைப்பு மீட்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, ஜாலான் பேராக் தீயணைப்பு மீட்பு நிலையத்தைச் சேர்ந்த மூத்த தீயணைப்பு அதிகாரி ஃபைரோல் மஹாசி மலேக் தெரிவித்தார்.

ஜார்ஜ் டவுன்-னிலிருந்து பினாங்கு பாலத்தை நோக்கி வந்துக்கொண்டிருந்தடொயோட்டா எஸ்டிமா வாகனம், எதிர்தடத்தில் நுழைந்ததால், அந்த விபத்து நிகழ்ந்தது.

அதில், வாகனம் ஒன்றினுள் சிக்குண்டிருந்த ஒருவரை, தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களை பயன்படுத்தி வெளியே கொண்டு வந்தனர்.

காயத்திற்கு இலக்காகிய 20 முதல் 60 வயதுக்கு உட்பட்ட அவர்கள் அனைவரும் பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, ஃபைரோல் மஹாசி மலேக் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்