பெர்லிஸ் மந்திரி பெசார் மகனை உட்படுத்திய நிதிமுறைகேடு குறித்த விசாரணை அறிக்கை அடுத்த வாரம் நிறைவடையும்

பெர்லிஸ் , மே 15-

அதிகாரம் மற்றும் நிதி முறைகேடு புரிந்தது தொடர்பில், பெர்லிஸ் மந்திரி பெசாரின் மகன் உள்பட ஐவர் மீது திறக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கை, அடுத்த வாரம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிறப்பு நடவடிக்கை பிரிவின் மூத்த இயக்குநர் அஸ்மி கமாருஜமான் அதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தரப்பினர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில், இன்னமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அடுத்த வாரம் புதன்கிழமைக்குள் அது நிறைவடைவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் கூறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கி, PERLIS-சில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களின் வழி, 600 ஆயிரம் வெள்ளி தொகையைப் பெறுவதற்காக, அவர்கள் அனைவரும் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தது தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

மற்றொரு நிலவரத்தில், சம்பந்தப்பட்ட நிதி முறைகேடு தொடர்பில், 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படவிருப்பதாக கூறப்படுவதை அஸ்மி கமாருஜமான் மறுத்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்