பூமிபுத்ரா பொருளாதார மாநாடு; இதர இனங்களைப் புறக்கணிக்கவில்லை!துணைப்பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi

கோலாலம்பூர், மார்ச் 14 –

பூமிபுத்ராக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 2ஆம் தேதி வரையில் நடத்தப்பட்ட 2024 பூமிபுத்ரா பொருளாதார மாநாடு, இந்நாட்டிலுள்ள இதர இனங்களைப் புறக்கணிக்காமல் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருப்பதாக துணைப்பிரதமர் டத்துக் ஶ்ரீ அகமாட் சாஹிட் ஹமிடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நலனை முன்னிறுத்தி பல்வேறு தரப்பினரை அம்மாநாடு உட்படுத்தியிருந்தது.

மலாய் மற்றும் இஸ்லாமிய சமூகம், இதர பூமிபுத்ராக்களைச் சேர்ந்த வர்த்தக சம்மேளனங்கள் மட்டுமின்றி, சீனர் மற்றும் இந்திய சமூகங்களைச் சார்ந்த வர்த்தக சம்மேளனங்கள், வர்த்தகம் சார்ந்த அரசு சாரா அமைப்புகளும் இடம்பெற்றிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டிலுள்ள இதர சமூகங்களுக்கான உதவிகளை புறக்கணிக்கும் எந்தவொரு நோக்கமும் இல்லை.

மாறாக, அனைத்து சமூகங்களை உட்படுத்தி ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வித்திடும் நோக்கத்தையே அது உட்படுத்தியிருந்ததாக கூறிய டத்துக் ஶ்ரீ டாக்டர் அகமாட் சாஹிட் ஹாமிடி , இதர இனங்களுக்கு அரசாங்கம் உரிய கவனத்தை வழங்கும் எனவும் உத்தரவாதம் அளித்தார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட மாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட 82 தீர்மானங்களை செயல்வடிவத்திற்கு கொண்டு வர இவ்வாரம், ஒருங்கிணைப்பு கூட்டத்தை தலைமையேற்றி தாம் நடத்தவுள்ளதாக, அம்னோ தலைவருமான அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்