பினாங்கு தைப்பூச விழாவில் உண்டியல் பணம் வசூல் மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 522 வெள்ளி 20 காசாகும்

நடந்து முடிந்த பினாங்கு தைப்பூச விழாவில் தண்ணீர் மலை, ஸ்ரீ பால தண்டாயுதப்பாணி ஆலயத்திற்கு பக்தர்களும், பொது மக்களும் செலுத்திய உண்டியல் பணம் மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 522 வெள்ளி 20 காசாகும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையரும், Batu Upan சட்டமன்ற உறுப்பினருமான குமரேசன் ஆறுமுகம் அறிவித்துள்ளார்.

2024 ஆம் ஆம் ஆண்டுக்கான பினாங்கு தைப்பூச விழா உண்டியல் பணம் இன்று சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மேற்பார்வையில் கோம்தார் கட்டடத்தில் 5 ஆவது மாடியில் எண்ணப்பட்டது..

மொத்தம் 32 உண்டியல்களின் வசூல் பணம் எண்ணப்பட்டதாக குமரேசன் குறிப்பிட்டார். உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் தொண்டூழிய அடிப்படையில் பணி ஓய்வுப்பெற்ற அதிகாரிகள், அரசாங்கப் பணியாளர்கள் மற்றும் அரசாங்க சார்ப்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 70 பேர் ஈடுபட்டதாக குமரேசன் தெரிவித்தார்.

தைப்பூச உண்டியல் பணம் எண்ணும் பணி, இந்து அறப்பணி வாரியத்தின் அகப்பக்கத்திலும் நேரலை செய்யப்பட்டது. 2024 ஆம் ஆண்டு பினாங்கு தைப்பூச விழாவில் 32 உண்டியல்களின் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் , மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 522 வெள்ளி 20 காசாகும்.

கோயிலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்கம், 50.52 கிராம் ஆகும். இந்து அறப்பணி வாரியத்தின் தங்க இரதத்தில் செலுத்தப்பட்ட தங்கம் 15.98 கிராம் ஆகும் என்று ஆணையர் குமரேசன் விவரித்தார்.

இந்த உண்டியல் பணத்தில் சில்லரை காசுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் இன்னும் எண்ணப்படவில்லை. அவை பின்னர் வங்கியில் எண்ணப்பட்டு, தொகை அறிவிக்கப்படும் என்று குமரேசன் குறிப்பிட்டார்.

அதேவேளையில் காணிக்கை செலுத்தியவர்களுக்கும், தொண்டுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அறப்பணி வாரியம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குமரசேன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்