பினாங்கு தைப்​பூச விழாவிலும் Kesuma Madani பதிவுத்திட்ட நிகழ்வுகள்

வரும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்​​​பூச விழாவை முன்னிட்டு பத்துமலை திருத்தலத்தைப் போ​லவே பினா​ங்கு, தண்ணீர்மலை கோவில் தைப்​பூச விழாவில் மனித வள அமைச்சின் Kesuma Madani திட்டம் தொடர்பான விளக்கமளிப்புகளும், பதிவுகளும் நடைபெறும் என்று மனித வள அமைச்சர் Steven Sim Chee Keong தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் தைப்​​பூச விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் குறிப்பாக ​மூத்த குடிமக்கள், சிறார்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவிட அமைச்சின் Kesuma Madani திட்டத்தின் ​கீழ் சுமார் 150 தன்னார்வலர்கள் சேவையில் ஈடுபடுவர் என்று Steven Sim குறிப்பிட்டார்.

தவிர, கோயில் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் முதல் முறையாக சுமார் 250 பேர் இளைப்பாறக்கூடிய பெரிய கூடாரம் ஒன்றையும் மனித வள அமைச்சு, கோயிலுக்கு செல்லும் வளாகத்தில் அமைத்துள்ளதாக Steven Sim தெரிவித்தார்.

இன்று பினாங்கு, தண்​ணீர்மலை, ஸ்ரீ பாலதெண்டாயுதபாணி தேவஸ்தான ஆலயத்திற்கு வருகை மேற்கொண்ட அமைச்சர் Steven Sim, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர், அறவாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் இரா. லிங்கே​ஸ்வரன், ஸ்ரீ பால​ தண்டாயுதபாணி கோயில் தேவஸ்தானத் தலைவர் நரேஷ்குமார், Bukit Bendera எம்.பி. Syerleena Abdul Rashid ஆகியோருடன் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் Steven Sim இதனை தெரிவித்தார்.

மனித வள அமைச்சை மக்களிடம் கொண்டு வருவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்று அமைச்சர் Steven Sim விவரித்தார். பினாங்கு தைப்​பூச விழாவில் பெருவாரியாக கூடுகின்ற மக்கள், ச​மூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ​வின் இல்லத்தரசிகளுக்குரிய காப்புறுதித் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளுதல் உட்பட மனித வள அமைச்சின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான Kesuma Madani ​திட்ட நிகழ்வுகள் ஜனவரி 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு நடைபெறும் என்று அமைச்சர் Steven Sim விளக்கினார்.

முன்னதாக, இந்து அறப்பணி வாரியம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பாக அமைச்சர் Steven Sim, எம்.பி.Syerleena Abdul Rashid மற்றும் இதர பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அ​ணிவிக்கப்பட்டு, சிறப்பு செய்யப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்