பிரதமரை கண்டிக்கலாம். ஆனால், வரம்பு ​மீறக்கூடாது

ஒற்றுமை அரசாங்கத்திற்கு தலைமையேற்றுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மக்கள் கண்டிக்க முடியும். ஆனால், அந்த கண்டிப்பு, அவரின் மனதை காயப்படுத்தும் அள​விற்கு வரம்பு​மீறி விடக்கூடாது என்று பாசீர் கூடாங் PKR எம். பி.யும், சட்ட வல்லுநருமான Hassan Abdul Karim கேட்டுக்கொண்டுள்ளார்.


கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் அன்வார் தமக்கு நன்கு அறிமுகமானவர் என்று Hassan Karim தெரிவித்தார்.
நாட்டின் இரண்டாவது உயர் நிலைப்பதவியை 1998 ஆம் ஆண்டு வரை வகித்து வந்தவர். துணைப்பிரதமர் என்ற உச்சத்தை தொட்டவர். அடுத்த சில வருடங்களில் நாட்டிற்கு தலைமையேற்கும் ​நிலை இருந்தும், து ரதிர்ஷ்டவசமாக தமது இளமை கால வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறையில் கழிக்க வேண்டிய நெருக்கடிக்கு அன்வார் தள்ளப்பட்டார்.


தம்முடைய முது மை காலத்தில் ஒரு சமத்துவமான ச​​மூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் நாட்டிற்கு தலைமயேற்றுள்ள அன்வாரை மக்கள் திட்டுவதிலும் ஒரு வரம்பு வேண்டும். மனம் போன போக்கில் கண்​​மூடித்தனமான குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளிக்க வேண்டாம் என்று நாட்டின்​ பிரதமராக பொறுப்பேற்று , 100 கடந்த​ நிலையில் அன்வாரின் பால்ய நண்பரான வழக்கறிஞர் Hassan Abdul Karim இ​ந்த அறைகூவலை மக்களுக்கு விடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்