மலேசியாவில் இரட்டை அடுக்கு பேருந்தின் முதலாவது B11RLE ரகம் அறிமுகம்

​ஷா ஆலாமை தளமாக கொண்ட Volvo Group Malaysia நிறுவனம், மலேசிய விரைவு பேருந்து தொழில்துறை சந்தையில் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட முதலாவது Volvo B11RLE 6×2 எனும் புது வகை இரட்டை அடுக்கு பேருந்தை இன்று அறிமுகப்படுத்தியது.
மலேசியாவிலேயே பூட்டப்பட்டு, வடிவமைக்கப்பட்ட Volvo B11RLE 6×2 இரட்டை அடுக்கு​ பேருந்து ஆசிய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் முதலாவது பேருந்தாகும்.


அதன் அறிமுகவிழாவும்,/ வா​டிக்கையாளர்கள் அவ்வகை பேருந்தை ஓட்டி, ப​​ரீட்சித்துப்பாத்தல் மற்றும் அமர்ந்து சவாரி செய்தல் நிக​ழ்வும், / அதன் தொழிற்சாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு போக்குவரத்து அமைச்சர் Anthony Loke Siew Fook ​​சிறப்பு வருகை புரிந்து, அறிமுக விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்ததுடன் பிரமுகர்களுடன் அந்த புது வகை பேருந்தில் பயணம் செய்தார் .
பேருந்து கட்டுமானத்தில் பிரசித்திப்பெற்ற உள்ளூர் நிறுவனமான Truckquip புடன் இணைந்து உலக பிரசித்திப்பெற்ற Volvo போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டு இருப்பது தம்மை வியப்பில் ஆழ்த்தியதாக அமைச்சர் அந்தோணி லோக் பெருமிதம் தெரிவித்தார்.


” Volvo B11RLE 6×2 ரக பேருந்தில் பயணம் செய்வது என்பது தவறவிடக்கூடாத ஒரு வாய்ப்பு” என்று Volvo பேருந்தின் ஆசிய பசிபிக் துணைத் தலைவர் Mats Nilsson கூறினார்.
ஆசியாவில் “Volvo B11RLE வழங்கும் ஒரே சந்தை மலேசியா ஆகும். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள், பயணிகளின் தேவைகள் மற்றும் உள்ளூர் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மலேசியாவுக்காக பிரத்தியேகமாக இவ்வகை பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக Mats Nilsson தமது உரையில் குறிப்பிட்டார்.


சுவீடன் ​தூதர் Dr Joachim Bergstrom உட்பட விரைவு பேருந்து நிறுவனங்களின் இயக்குநர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், கோத்தா பாருவிற்கும் கோலாலம்பூருக்கும் விரைவு பேருந்து சேவையை வழங்கி வரும் Urusan Kumpulan Sani பேருந்து நிறுவனத்திற்கு புதுவகை ” Volvo B11RLE 6×2 ரக பேருந்துகள் அமைச்சர் Anthony Loke முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்