போலீஸ் அதிகாரியின் கடமையை செய்யவிடாமல் இடையூறாக இருந்ததாக இந்திய பணியாளர் மீது குற்றச்சாட்டு

பினாங்கு, மே 21-

போலீஸ் அதிகாரியின் கடமையை செய்யவிடாமல் இடையூறாக இருந்ததாக வாகன நிறுத்தும் உதவியாளர் ஒருவர் ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

35 வயது சுப்ரமணியம் என்கிற அந்த வாகன நிறுத்தும் உதவியாளர் மாஜிஸ்திரேட் நட்ராத்துன் நைம் முகமது சைதி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது 10,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 186 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மே 19 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் பினாங்கு, டத்தோ கெராமாட் -டில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்