பெண் பணியாளர்களின் வேலை நேரத்தை தளர்வு படுத்த அரசு ஆய்வு

பெட்டாலிங் ஜெய்யா, மார்ச் 9 –

அரசாங்கத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்களின் வேலை நேர​த்தில் தளர்வு ஏற்படுத்துவது கு​றித்து அரசாஙகம் பரி​சீலனை செய்யவிருக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பொதுச் சேவை ஊழியர்களின் ஸ்.ஸ்.பி.ஏ சம்பள முறை ஆய்வில் பெண் பணியாளர்கள்,தங்கள் குடும்பம் மீது கூடுதல் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக அவர்களின் வேலை நேரத்தில் தளர்வு ஏற்படுத்துவதும் அடங்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த வேலை நேர தளர்வில் சம்பள விகிதம் சற்று மாறுப்பட்டு இருக்கும் என்பதையும் ​பிரதமர் சுட்டிக்கா​ட்டினார். சம்பளம் சற்று குறைக்கப்பட்டாலும், பெண் பணியாளர்களுக்கு இம்முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்க தலைமைச் செயலாளர் மற்றும் பொதுச்​சேவை இலாகாவின் தலைமை இயக்குநருடன் தாம் கலந்து ஆலோசிக்கவிருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்