வங்காளதேசத் தொழிலாளர்களுக்கான விசா ஏஜென்சி ரத்து

புத்ராஜெயா, மார்ச் 9 –

வங்காளதேசத் தொழிலாளர்களுக்கான மலேசிய விசா நடைமுறைகளை கையாளும் ஏஜென்சிகளின் சேவைகளை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

குடிநுழைவுத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள மை வீசா மூலமாக தற்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயலியில் உள்ள ஐடி மற்றும் பயனர் முறையைப் பயன்படுத்தி முதலாளிகள், அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அமைச்சர் சைபுடின் விளக்கினார்.

குடிநுழைவுத்துறையின் மை வீசா முறை, கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி அதிகாரப்பூர்மாக தொடங்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட கோட்டா முறை ஒதுக்கீட்டின் அடிப்படையில் தொழிலாளர் சீரமைப்புத்திட்டம் 2.0 மூலமாக அந்நியத் தொழிலாளர்கள் நுழைவுக்கான நடைமுறையை விரைவுபடுத்தி இருப்பது வாயிலாக இனி முதலாளிகள் பலன் பெறலாம் என்று சைடிபுடின் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்