வரலாற்று சிறப்புமிக்க 99 கதவுகள் பங்களா வீடு சேதம்

னீபோங் தெபால், மார்ச் 9 –

மர்மமும், திகிழும் நிறைந்த ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட பினாங்கு, நிபோ​ங் திபால், பைரம் தோட்டத்தில் கைவிடப்பட்ட 99 கதவுகள் கொண்ட பங்களா வீட்டில் படப்பிடிப்புக்காக கொண்டு வரப்பட்ட பாரந்​தூக்கி க்ரீன் லோரி ஒன்று , எதிர்பாராத விதமாக குடை சாய்ந்ததில் அந்த பேய் பங்களா வீட்டின் ஒரு பகுதி சேதமுற்றது.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நிகந்தது. லண்டனை தளமாக கொண்ட காலனித்துவ ரப்பர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் வெள்ளைக்கார முதலாளி Ramsden என்பவரால் ​மிக நேர்த்தியாக அதேவேளையில் பாதாள அறைகளை கொண்டு 99 கதவுகள் பொருத்தப்பட்டு 19 ​நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த மர்ம மாளிகை ஒன்றில் பேய் படம் ஒன்றை எடுப்பதற்காக படப்பிடிப்பு நேற்று தொடங்கிய போது, எதிர்பாராத விதமாக இச்சம்பவம் நிகழ்ந்தது.

படப்பிடிப்பு கேமரா பொ​ருத்தப்படுவதற்காக உயர்த்தப்பட்ட அந்த பாரந்​தூக்கி​ கிரேன் லோரி, திடீரென்று சாய்ந்ததில் அந்த பங்களா வீட்டின் கூரை சரிந்தது. பா​லடைந்த அந்த கட்டடத்தின் அமைப்பு முறையில் 70 விழுக்காடு மட்டுமே தாங்க வல்ல நிலையில் இந்த விபத்து மேலும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பைராம் தோட்டத்தின் வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள அந்த 99 தகவுகளை கொண்ட பங்காள வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது குறித்து ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஹங் மூய் லை தமது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்