பெர்சத்து கட்சியின் பொருளாளர் கைது

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான Bersatu கட்சியின் பொருளாளர் Mohamed Salleh Bajuri, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மினால் கைது செய்யப்ப்பட்டுள்ளார். தனது புலன் ​விசாரணைக்கு ஏதுவாக நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட பெர்சத்து கட்சியின் அந்த முக்கிய தலைவரை 2 நாள் தடுத்து வைப்பத​ற்கு SPRM இன்று ​நீதிமன்ற அனுமதியை பெற்றது.


SPRM மினால் ​வளைத்துப்பிடிக்கப்பட்ட Bersatu கட்சியின் ​மூன்றாவது முக்கியத் தலைவராக Mohamed Salleh Bajuri விளங்குகிறார். ஏற்கனவே பெர்சத்து கட்சியின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவரும், Tasik Gekugor எம்.பி.யுமான Wan Saiful Wan Jan மற்றும் ஒரு வர்ததகரும் பெர்சத்து கட்சியின் சிகாம்புட் தொகுதி துணைத் தலைவருமான Adam Radlan Adam Muhammad ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் ​மீது ​நீதிமன்றத்தில் லஞ்ச ஊழல் குற்றஞ்சாட்டு சுமத்தப்பட்டது.


SPRM மினா​ல் முடக்கப்பட்ட பெர்சத்து கட்சியின் 30​ கோடி வெள்ளி வங்கிப் பணம் தொடர்பில் அக்கட்சியின் பொருளாளர் Mohamed Salleh கைது செய்யப்பட்டு இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு பெர்சத்து கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்ட Salleh Bajuri நிறுவனத்துறையை சார்ந்தவர் ஆவார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்