பெர்சி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம்

லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தண்டனைக் காலத்தை 6 ஆண்டுகளாக குறைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை எதிர்த்து நாட்டின் தூய்மையான தேர்தலை வலியுறுத்தும் அமைப்பான பெர்சி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடிய சாத்தியம் இருப்பதாக இன்று கோடி காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் மீதான விரிவான விவரங்களை நாளை புதன்கிழமை வெளியிடப்படும் என்று பெர்சி – வின் தலைவர் முஹம்மது பைசல் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது தொடர்பில் நேற்று நடைபெற்ற பெர்சி – வின் செயலவைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே இந்த செயலவைக்கூட்டத்தில் கலந்து கொண்டவரான பெர்சி வின் முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லா- வுடன் தொடர் கொண்டு கருத்து கேட்ட போது, அந்த ஆர்ப்பாட்டம் வரும் சீனப்புத்தாண்டு முடிந்தப் பின்னர் நடைபெறக்கூடும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்