பொருத்தமான தருணத்தில் எரிபொருளுக்கான உதவித் தொகையை மலேசியா குறைக்கும்

கோலாலம்பூர், மே 15 –

எரிபொருளுக்கான உதவித் தொகையை குறைப்பது உட்பட அரசாங்க கடன் அளவைக் குறைக்க வீணான செலவுகளை தடுப்பதற்கு மலேசியா மேற்கோள்ள வேண்டிய இன்றியமையாத நடவடிக்கைகள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று அறிவித்துள்ளார்.

எரிபொருளுக்கான உதவித் தொகையை குறைப்பது மூலம் ஏழை மக்கள் பாதிக்கப்படாமல், அவர்கள் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு என்னென்ன சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்பதை மலேசிய ஆராய்ந்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

எனினும் பொருத்தமான தருணத்தில் உரிய சீர்திருத்த நடவடிக்கைகளை மலேசிய மேற்கொள்ளும் என்று கர்ட்டாருக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் , தலைநகர் தோஹா- வில் பொருளாதார ஆய்வரங்கில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

மலேசிய தனது மக்களுக்கு எதிபொருள் மற்றும் சமையல் எண்ணெய்க்கு உதவித் தொகை வழங்கி வருவதையும் பிரதமர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்