பேரா – பினாங்கு தண்ணீர் உடன்படிக்கை : 6  முதல் 8 ஆண்டுகள் ஆகலாம்

ஜோர்ஜ் டவுன், ஜன – 5,

பேரா மாநிலத்துடனான தண்ணீர் உடன்படிக்கை இன்னும் தொடங்கப்பட வில்லை எனவும் , அது நிறைவேற ஆறு முதல் எட்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று பினாங்கு முதலமைச்சர் சோவ் கோந் இயோவ் கூறினார்.

பினாங்குக்கு தண்ணீர் அனுப்ப புத்ராஜெயா ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதியை இன்னும் ஒதுக்காததால், இந்த ஆண்டு திட்டம் தொடங்கப்படாது என்று பேரா மாநில மந்திரி பெசார் சாரணி முகமட்டின் அறிக்கை குறித்து கருத்துரைக்கயில், சோவ் அவ்வாறு கூறினார்.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில், பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பதால், பேரா மாநிலத்தின் சுங்கை மூடாவில் இருந்து சுத்திகஎஇக்கப்படாத தண்ணீரை பினாங்கு மாநிலத்திற்கு விநியோகம் செய்ய இந்த உடன்படிக்கை குறித்து பேசப்பட்டு வந்தது.

ஆனால், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பினாங்கிற்கு வழங்க பேரா அரசாங்கம் ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை பேரா மாநில அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

எனவே, அந்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் விவகாரத்துல் பினாங்கு மாநில அரசு தலையிடாது எனக் கூறிய சோவ், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் விலை இன்னும் முடிவு செய்யப்பட வில்லை எனவும் தேசிய தண்ணீர் சேவை ஆணையமான SPAN உடன் பேச்சு வார்த்தையில் இருப்பதாகவும் சோவ் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்