பொது உறவு அதிகாரி மீது 80 மோசடி குற்றச்சசாட்டுகள்

கோலாலம்பூர், மார்ச் 27-

வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான 60 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 155 தங்கக் கட்டிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை போலியாக்கி, தனது ஊழியர்களை நம்பவைத்து, ஏமாற்றியது தொடர்பில் வங்கி ஒன்றின் வாடிக்கையாளர் பொது உறவுப் பிரிவின் முன்னாள் நிர்வாகி ஒருவருக்கு எதிராக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று 80 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

46 வயது மோஹட் சைபுல்ரிஜால் சாட் என்ற அந்த முன்னாள் வங்கி நிர்வாகி, கடந்த 2019 ஆம் ஆண்டிற்கும், 2021 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் கோலாலம்பூர், பங்சார் ஷாப்பிங் சென்டர்- லில் உள்ள முன்னணி வங்கியில் இக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இன்னும் திருமணம் ஆகாத நபரான அந்த முன்னாள் நிர்வாகி, கோல்ட் சேவ் கீப்பிங் சர்வீஸ் வித்ராவால் பார்ம் என்ற முக்கிய பாரத்தை பயன்படுத்தி, வங்கியின் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்கக்கட்டிகளை வாடிக்கையாளர்கள் திரும்ப பெற்றுக்கொண்டது மற்றும் அந்த தங்க கட்டிகளை வாங்கியது போன்ற போலியாக கையெழுத்திட்டு, அந்த தங்க கட்டிகளை வெளியாக்கி நம்பிக்கை மோசடி புரிந்துள்ளார் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் நம்பிக்கை மோசடி சட்டம் 420 ஆவது பிரிவின் கீழ் அந்த முன்னாள் நிர்வாகி 80 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்