போட்டியிடுவது குறி​த்து MUDA கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை

ஷாஹ் அலாம், ஏப்ரல் 13-

வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து MUDA கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என்று அக்கட்சியின் உதவித் தலைவர் சித்தி ராஹாயூ பஹ்ரின் தெரிவித்துள்ளார்.

இது குறி​த்து கட்சியின் உச்சமன்றத்துடன் கலந்து ஆலோசித்தப்பின்னரே இந்த இடைத் தேர்தலில் MUDA போட்டியிடுவதா? இ​ல்லையா? என்பது குறி​த்து கட்சி முடிவு செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட MUDA கட்சி, கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவரும், உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் ​மூடா கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஆர். சிவபிரகாஷை களம் இறக்கியது.

நான்கு முனைப்போட்டியில் 4,119 வாக்குகள் வித்தியாசத்தில் டிஏபி சார்பில் போட்டியிட்ட பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் லீ கீ ஹியோங் வெற்றி பெற்றார். MUDA கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் சிவபிரகாஷிற்கு 1,186 வாக்குகள் கிடைத்தன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்