போதைப்பொருள் கடத்தலில் 5,041 பேர் கைது

கோலாலம்பூர், மார்ச் 8 –

கடந்த மார்ச் 4 முதல் 6 ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஓபி தாபிஸ் காஸ் 2/24 திடீர் சோதனையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத குற்றங்களுக்காக 5,041 பேர் கைது செய்யப்பட்டனர்.

இச்சோதனையின் போது மொத்தம் 5,352 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்துக் காவ் கோக் சின் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 2,855 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாக இருப்பதுடன் அதில் நால்வர் அரசு ஊழியர்கள் என்று விசாரணையில் கண்டறியப்பட்டதாக காவ் கோக் சின் தெரிவித்தார்.

இதில் மேலும் ஒரு அரசு ஊழியர் மற்றும் ஒரு மாணவர் உட்பட 497 டோக்கன்களை பறிமுதல் செய்ததாக காவ் கோக் சின் விவரித்தார்.

பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுக்காக 186 நபர்கள், ஒரு அரசு ஊழியர், ஏழு மாணவர்கள் உட்பட சட்டவிரோத குற்றங்களுக்காக 1,503 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் நேற்று ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்