வெடிபொருட்களை கொண்டு சென்ற இரு போலீசார் காணவில்லை

காபிட், மார்ச் 8 –

லெப்போங் பாலெ தேசிய பள்ளியின் ஜெட்டிக்கு அருகிலுள்ள சுங்கை பாத்தாங் பாலே வில் படகு மூழ்கிய சம்பவத்தில் காணாமல் போன நால்வரில் இருவர் போலீஸ் அதிகாரிகள் என்று தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட இரண்டு அதிகாரிகளும் 35 கிலோகிராம் வெடிபொருட்கள் உட்பட 1050ர்.டி.ஸ் வெடிகுண்டுகளுடன் கூச்சிங் கிலிருந்து காப்பிட் டிற்கு சென்றதாக காப்பிட் மாவட்ட போலீஸ் தலைவர் டிப்புத்தி சுப்ரின்டென்டன் ரொஹானா னானு கூறினார்.

காணாமல்போய் தேடப்பட்டு வரும் அந்த போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் சமூகநல உதவி கிளையை சேர்ந்தவரான சர்ஜானா ஜோனாதான் லாம்பேட் , மற்றொருவர் காப்ப்பிட் ஐ.பி.டி யில் உள்ள ஆயுதக் கிளையை சேர்ந்த கோன்ஸ்தெபல் இஸ்கன்டார் இப்ராஹிம் என்று ரொஹானா னானு அறிவித்தார்.

நேற்று மாலை 5 மணியளவில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட மூன்று உதவியாளர்கள் ஸ்.கெ லெப்போங் பாலே ஜெட்டியிலிருந்து ங் துலீ விற்கு வெடிபொருட்களை அனுப்புவதற்காக சென்று கொன்டிருக்கும் பொழுது படகு மூழ்கி காணாமல் போனதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்