போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தன்னை மலேசியா DON என்று முத்திரைக் குத்துவதா? அவதூறு வழக்கு தொடுத்தார் டத்தோ மாலிக்

கோலாலம்பூர், மார்ச் 19 –

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இந்திய போலீசாரிடம் பிடிபட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னன் என்று கூறப்படும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபிர் சாடிக் க்குடன் தன்னை தொடர்புபடுத்தி, தன்னை மலேசியா DON என்று முத்திரை குத்தியுள்ள இந்திய பத்திரிகையாளர் ஒருவர் உட்பட இரு தரப்பினருக்கு எதிராக மலேசிய தொழில் அதிபர் டத்தோ அப்துல் மாலிக், சென்னையில் அவதூறு வழக்கை தொடுத்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று மலேசிய நேரப்படி மாலை 7 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மலேசிய தொழில் அதிபர் டத்தோ அப்துல் மாலிக்கை பிரதிநிதிப்பதாக கூறிக்கொண்ட இரு வழக்கறிஞர்கள், அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

டத்தோ அப்துல் மாலிக்கை மலேசியாவின் DON என்று முத்திரை குத்தி, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு இருக்கும் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபிர் சாடிக் கிற்கு தொடர்பு இருப்பதைப் போல சென்னையை தளமாக கொண்ட இரு YOU TUBE சேனல்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளதாக அந்த இரு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மலேசியாவில் பிரபலமாக விளங்கும் டத்தோ மாலிக்கின் நல்லெண்ணத்தையும்,, நல்லொழுக்கத்தையும், நற்பெயரையும் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்பட்டுள்ள காணொளிகள் தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்பட்டு இருக்கின்றன.

தவிர, பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் உட்பட இரு தரப்பினருக்கு எதிராக டத்தோ மாலிக் அவதூறு வழக்கு தொடுத்து இருப்பதாக அந்த இரு வழக்கறிஞர்கள், செய்தியாளர்களிடம் விவரித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் மீம்சல் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட டத்தோ மாலிக், தமக்கு எதிராக கூறப்பட்டுளள் அவதூறு தொடர்பில் கோலாலம்பூர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்திலும் புகார் செய்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்