போதைப்பொருள் கடத்தியதாக மூதாட்டி உட்பட மூவர் குற்றச்சாட்டு

பொண்டியன் , மே 15-

சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தி வைத்திருந்ததாக மூதாட்டி உட்பட மூன்று ஆண்கள் பொண்டியன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

75 வயது சான் ஆ மொய் என்கிற அந்த மூதாட்டி உட்பட மேலும் மூன்று சீன ஆடவர்கள் மாஜிஸ்திரேட் நூர் அசுவின் அப்துல் மோதி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது தலையசைத்தனர்.

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதால் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 1 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 12(2) , 12(3) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த மே 4 ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் ஜொகூர், பொண்டியன், குக்குப் லாவுட் – டில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்