போதைப்பொருள் வழக்கில் மெக்கானிக் விடுதலை

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட மெக்கானிக் ஒருவரை ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

45 வயது எஸ். ராஜா என்ற அந்த மெக்கானிக்கிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு தவறிவிட்டதாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட ராஜாவை எதிர்வாதம் செய்ய அழைக்காமலேயே விடுதலை செய்வதாக நீதிபதி பூபிந்தர் சிங் உத்தரவிட்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி இரவு 8 மணியளவில் ஈப்போ, Taman Mas Falim, Persiaran Sungai Pari Timur 14 என்ற இடத்தில் 76.689 கிராம் போதைப்பொருளை கடத்தியதாக ராஜா குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்