ஷீலாவின் தலைவிதி மார்ச் 20 ஆம் தேதி தெரியவரும்

பொது மக்களுக்கு இடையூறும், அசெகரியத்தையும் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலாவிற்கு எதிரான குற்றச்சாட்டு மீட்டுக்கொள்ளப்படுமா? அல்லது தொடரப்படுமா? என்பது குறித்து அவரின் தலைவிதி வரும் மார்ச் 20 ஆம் தேதி முடிவு செய்யப்படவிருக்கிறது.

தனக்கு எதிராக பிராசிகியூஷன் தரப்பு கொண்டு வந்துள்ள குற்றச்சாட்டு மிக அற்பமானது என்றும், அதில் அடிப்படையில்லை என்றும் கூறி, கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி சட்டத்துறை அலுவலகத்திற்கு பிரதித்துவ மனு ஒன்றை இன்ஸ்பெக்டர் ஷீலா சார்வு செய்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் தெரிவித்துள்ளார்.

36 வயதான ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார் என்ற இயற்பெயர் கொண்ட இன்ஸ்பெக்டர் ஷீலாவின் இந்த பிரதிநித்துவ மனு தாக்கலைத் தொடர்ந்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் வரும் மார்ச் 20 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று கோலாலம்பூபுர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் குறிப்பிட்டார்.

தமக்கு எதிரான குற்றச்சாட்டு ஏன் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு இன்ஸ்பெக்டர் ஷீலா 200 பக்கங்களை உள்ளடக்கிய பிரதிநிதித்துவ மனுவை சட்டடத்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளதாக மனோகரன் மலையாளம் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு ஜுன் 16 ஆம் தேதி மாலை 5.26 மணிளவில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள பேரங்காடி மையத்தின் கார் நிறுத்தும் இடத்தில் 27 வயது காரோட்டி நுரைஹான் நட்ஸிரா இப்ராஹிம் என்பவரை நோக்கி, Hon சத்தம் எழுப்பி, கூச்சலிட்டு, பொது அமைதிக்கு இடையூறு விளைவித்ததாக இன்ஸ்பெக்டர் ஷீலா குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்