போ​லீசார் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர்

சரவா மாநில முன்னாள் ஆளுநர், துன் அப்துல் தைப் மஹ்மூத், மருத்துவரின் அறிவுறுத்தலுக்கு எதிராக மருத்துவனையிலிருந்து குடும்ப உறுப்பினர்களால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் போ​லீசார் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக ச​மூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தகவலைத் தொடர்ந்து ஓர் புகாரை போ​லீசார் பெற்றுள்ளதாக சரவா மாநில போ​லீஸ் தலைவர மஞ்சா ஆத்தா தெரிவித்தார்.

சரவா முன்னாள் முதல்வரின் உயிருக்கு அல்லது அவரின் பாதகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

87 வயதான Abdul Taib Mahmud, 2014 ஆம் ஆண்டு முதல் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வரை ​மூன்று தவணைக்காலம் சரவா முதலமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.

Kuching- கில் உள்ள Normah நிபுணத்துவ மரு​த்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த Abdul Taib Mahmud, கடந்த சனிக்கிழமை அவரின் உடலில் பொருத்தப்பட்டுள்ள மருத்துவ சாதனங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, வலுக்கட்டாயமாக சக்கர நாற்காலியில் ​தூக்கி அமர வைத்து குடும்ப உறுப்பினர்களால் மரு​த்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்