மாணவர்களின் ஆங்கில புலமையை மேம்படுத்த Saraswathy English Challenge வந்துவிட்டது

மலேசியாவில் இருக்கின்ற பின்தங்கிய சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு ஆங்கிலமும் பொதுச் பேச்சுத் திறன்களையும் மேம்படுத்துவதன் வாயிலாக வெற்றிக்கான சமநில வாய்ப்புகளை வழங்கும் Basis Bay நிறுவனத்தின் தலைமையில் பி40 மாணவர்களுக்கு Saraswathy English Challenge போட்டி மீண்டும் மலர்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் Basis Bay நிறுவனத்தின் தலைவரான டத்தோ பிரபா தியாகராஜாவின் எண்ணத்தில் உருவாகிய இந்த Saraswathy English Challenge இவ்வாண்டு மலேசியாவில் உள்ள 530 தமிழ் பள்ளிகளில் பயிலும் ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டு பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்ட Saraswathy English Challenge – க்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டதுடன் 250 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 1,200 பங்கேற்பாளர்கள் இப்போட்டியில் கலந்து தங்களின் ஆங்கில திறமையை வெளிகாட்டினர்.

வருகின்ற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதிக்குள் பி40 பிரிவைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 1 நிமிடத்திற்குள் கொடுக்கப்படுகின்ற தலைப்பினை தேர்ந்தெடுத்து காணொளி செய்து QR குறையீட்டில் ஸ்கேன் செய்து அனுப்பப்பட வேண்டும் என்று ஏற்பாட்டு குழு தலைவர் ஜி.எஸ் முரளி விளக்கினார்.

மாணவர்களுக்கு சிறுவயதிலிருந்தே ஆங்கிலப் புலமையின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதுடன் பொது பேச்சுத்திறனை வளர்த்துகொள்ளவும் தன்னம்பிக்கையை அதிகரிப்பதுமே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும் என்று டத்தோ பிரபா தெரிவித்தார்.

இன்று ஷா அலாம், Basis Bay, Lobby – நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ பிரபா இப்போட்டி குறித்து விவரித்தார்.

கடந்த ஆண்டு Saraswathy English Challenge – போட்டியில் கலந்து வெற்றி பெற்ற மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தங்களின் கருத்துக்களையும் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தையும் இந்நிகழ்வில் பகிர்ந்து கொண்டனர். மாணவர்கள் போட்டியில் பங்கெடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் பள்ளி நிர்வாகத்தின் சேவைகளும் பாராட்டக்குரியது என்று டத்தோ பிரபா கூறினார்.

பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மற்றும் பூர்வக்குடி மாணவர்களுக்காக நடத்தப்படும் இப்போட்டியில் முதல்நிலையில் வெற்றிபெருபவர்களுக்கு 20,000 வெள்ளி ரொக்கப்பரிசு, இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு 10,000 வெள்ளி மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளருக்கு 5,000 வெள்ளி மற்றும் அனைத்து இறுதி நிலை போட்டியாளர்களுக்கு 1,000 வெள்ளி காத்துக் கொண்டிருக்கின்றன.

மாணவர்கள் இவ்வாய்பை தவறவிடாமல் போட்டியில் கலந்து கொண்டு ஆங்கில புலமையை வளர்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக டத்தோ பிரபா அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்