போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதை ஜொகூர் அரசு வன்மையாக கண்டிக்கிறது

Johor, Ulu Tiram போலீஸ் நிலையத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தொட‌ர்புடைய எந்தவொரு வன்முறையையும் தீவிரவாதத்தையும் Johor அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

அந்த தாக்குதலில் இரண்டு அரச மலேசிய போலீஸ் படை உறுப்பினர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, மற்றொருவர் பலத்த காயத்திற்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதை மந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi நினைவுக்கூர்ந்தார்.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் PDRM – உடன் Johor அரசு உறுதியாக இருந்து செயல்படுவதாக Datuk Onn Hafiz கூறினார்.

அதுமட்டுமின்றி, Johor அரசாங்கம் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதையும் அதில் அப்பாவி மக்கள் பாதிப்படைவதையும் தவிர்ப்பதற்கு பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்படவிருப்பதாக இன்று நடைபெற்ற 15 ஆவது Johor சட்டமன்ற மாநாடு நிறைவு நிகழ்ச்சியில்
அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த தாக்குதலில் உயிரிழந்த இரண்டு போலீஸ்காரர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்யும்படி சபையில் அனைவரையும் Datuk Onn Hafiz கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்