போலீஸ் காரை பார்த்து தப்பிக்க முயன்ற மூன்று பேர் கைது

கிளந்தான், மார்ச் 22.

கிளந்தானின் மூவர் பயணித்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள வீடொன்றில் மோதி தள்ளியது மட்டுமில்லாமல் போலீசிடமிருந்து தப்பிக்க முயன்றபோது வளைத்து பிடித்து கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு 7:35 மணியளவில் பாசிர் மாஸ், கம்போங் கேடோண்டோங்கில் சந்தேகிக்கும் 36 மற்றும் 41 வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

வழக்கம் போல அவ்விடத்தில் போலீஸ் அதிகாரிகள் குற்றத்தடுப்பு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில் சந்தேகத்திற்கிடமாக அக்கார் நிறுத்தப்பட்டிருப்பதை தமது தரப்பு கவனித்ததாக பாசிர் மாஸ் போலீஸ் தலைவர் காமா அஸுரல் முகமத் கூறினார்.

போலீசாரின் ரோந்து காரை பார்த்ததும் அக்காரின் ஓட்டுநர் சட்டென்று புறப்பட்டதாகவும் அடுத்த தெருவில் அக்கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவ்விடத்தில் இருந்த ஒரு வீட்டில் மோதியதாகவும் காமா அஸுரல் விவரித்தார்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட அந்நபர்கள் மீது ஏற்கனவே குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் போதைபொருள் எடுத்திருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்