மகாதீருக்கு எதிராக போலீஸ் துறையிடம் மகஜர்

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு எதிராக நாளை ஜனவரி 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் 50- க்கும் மேற்பட்ட தன்னார்வ இயக்கங்களின் ஆதரவோடு, திட்டமிட்டப்படி கோலாலம்பூர் செந்தூல் மாவட்ட காவல் நிலையத்தில் பரிந்துரை புகார் ஒன்று வழங்கப்படும் என்று மலேசியத் தமிழர் தன்மானப் பேரியக்கத்தின் தலை வரும், பிரபல ஊடகவியளாருமான முனைவர் பெரு.அ. தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

“இந்தியர்களையும் சீனர்களையும் இந்நாட்டுக்கு விசுவாசமற்றவர்கள்” என்று தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்ற ஒரு முன்னாள் பிரதமரான துன் மகாதீர், அண்மையில் பிரபலமான இந்தியத் தொலைக்காட்சி ஒன்றிக்கு அளித்த நேர்காணலில், .குறிப்பாக “இந்திய சமூகத்தை நாட்டுக்கு விசுவாசம் அற்றவர்கள் என்று குறிப்பிட்டதோடு,’ மலேசியர்களாகவும்,அவர்களைக் கருதவும்- ஏற்கவும் கூட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அவர் குறிப்பிடும் காரணம்- “இந்தியர்கள், மலாய்க்காரர்களாக இன்னும் தங்களை மாற்றிக் கொள்ள வில்லையென்றும், இன்னும் அவர்கள் தாய்மொழியிலேயே வீடுகளில் பேசி வருகிறார்கள். அதனால் இந்தியாவையே, நேசித்து வருகிறார்கள்” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

துன் மகாதீரின்அவரின் இதுபோன்ற இனத்துவேசக் கருத்துக்கள்-ஒன்றுபட்ட மலேசியர்களை ஒருமுகப்படுத்த பெருந் தடையாகயிருப்பதுடன், அது, அரசியலமைப்புக்கு முற்றிலும்முரணாகவும் இருக்கிறது. அதனால் இது,போலீஸ் தலைவரின் நேரடி கவனத்திற்கு கொண்டு வரவேண்டியே இந்த பரிந்துரைப்புகாரை- 50- க்கும் மேற்பட்ட தன்னார்வ இயக்கங்களின் பேராதரவோடு ஞாயிறன்று வழங்கப்படவிருக்கிறது.

இந்நிகழ்வில் இயக்க உறுப்பினர்களோடு, ஆதரவாளர்களும் பெருமளவு பங்கேற்று ஆதரவை வழங்குமாறு முனைவர்- பெரு.அ.தமிழ்மணி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்