மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்-மிற்கு எதிராக போலீசில் புகார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 19-

மனித வள அமைச்சர் என்ற முறையில் ஸ்டீவன் சிம், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று கூறி தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமான NUBE இன்று போலீசில் புகார் செய்துள்ளது.

NUBE-யின் அனைத்து 5 கிளைகளின் பிரதிநிதிகளும் இந்த போலீஸ் புகார்களை செய்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் வங்கி ஊழியர்களுக்கான பண்டிகை கால உதவித் தொகை விவகாரத்தை வங்கி ஊழியர்களை பிரதிநிதிக்கும் பிரதான தொழிற்சங்கமான NUBE- க்கு தெரியாமலேயே MCBA எனப்படும் மலாயன் வர்த்தக வங்கிகள் சங்கத்துடன் கூட்டு சேர்ந்து அமைச்சர் ஸ்டீவன் சிம், மறைமுகமாக விவாதித்துள்ளார்.

வங்கிகள் தனது ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை பண்டிகை கால உதவித்தொகையாக வழங்குவதற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் MCBA-வுடன் NUBE இணக்கம் கண்டு, கையெழுத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டிய மனித அமைச்சர் Steven Sim, , முதலாளிமார்கள் சங்கத்துடன் கூட்டு சேர்ந்து தொழிலாளர்களக்கு எதிராக மறைமுக வேலையை செய்துள்ளார் என்று NUBE யின் ஐந்து கிளைகளின் பிரதிநிதிகளும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்