மலேசியருக்கு மரணம் விளைவித்ததாக அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 02 –

ஓர் மலேசியரான கே. சந்திரபோஸ் என்பவரை தாக்கி, மரணம் விளைவித்ததாக ஓர் அமெரிக்கர், பெட்டாலிங் ஜெயா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஒரு டெக்னிஷனான 30 வயது தாமஸ் ஜோசப் என்ற அந்த அமெக்கர், நீதிபதி சியாஹ்லிசா வர்நோஹ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, ஆங்கிலத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, ஜாலான் ப்ரொப். டி ராஜா உங்க்கு அஜிஸ் சாலையில் The Square கேளிக்கை மையத்தில் 58 வயது கே. சந்திரபோஸ் என்பவரை தாக்கி மரணம் விளைவித்தாக அந்த அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 304 பிரிவின் கீழ் நோக்கமில்லா கொலை குற்றச்சாட்டாக அந்த அமெரிக்கர் மீது சுமத்தப்பட்டது.

அந்த அமெரிக்கரை ஜாமீனில் விடுவிப்பதற்கு அவரின் வழக்கறிஞர் செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிபதி நிராகரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்