லோ சியூ ஹாங்- கின் மூன்று பிள்ளைகளும் இஸ்லாமியர் அல்ல

பெட்டாலிங் ஜெயா, மே 14-

உயர் நீதிமன்றம், அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை அதிரடியாக நிலைநிறுத்தியது கூட்டரசு நீதிமன்றம்.

தங்களது தந்தை நாகேஸ்வரன் முனியாண்டியினால் ஒரு தலைபட்சமாக மதமாற்றம் செய்யப்பட்ட ஒரு தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹாங்- கின் மூன்று பிள்ளைகளும் இஸ்லாமியர் அல்ல என்ற உயர் நீதிமன்றம் மற்றும் அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் இன்று அதிரடியாக நிலைநிறுத்தியது.

புத்த மதத்தைச் சார்ந்தவரான 36 வயது லோ சியூ ஹாங்- கின் மூன்று பிள்ளைகளும் இஸ்லாமியர் அல்ல என்று தீர்ப்பு அளித்து இருக்கும் உயர் நீதிமன்றம் மற்றும் அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு போராடி வரும் MAIPS ( மைப்ஸ் ) எனப்படும் பெர்லிஸ் சமய மற்றும் மலாய் பாரம்பரிய மன்றம் மற்றம் இதர மூன்று தரப்பினர் செய்து கொண்ட மேல்முறையீட்டை தள்ளுபடி செய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்க்கு மைமுன் துவான் மாட் ஏகமனதாக தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கூட்டரசு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் பெற்றோர்களில் தந்தை அல்லது தாயார் என்ற நிலையில் யாராவது ஒருவர் அனுமதித்தால் 18 க்கும் கீழ்பட்ட வயதுடைய பிள்ளைகளை மதம் மாற்றம் செய்ய முடியும் என்று மாநில சட்டத்தை மேற்கோள்காட்டி, மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மதவாதிகளின் ஒருதலைபட்ச மத மாற்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

லோ சியூ ஹாங்- கின் மூன்று பிள்ளைகளும் இஸ்லாமியர்கள் அல்ல என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கு எந்த காரணமும் இல்லை என்று பெர்லிஸ் மாநில சமய மன்றத்திற்கும், இதர மூன்று தரப்பினருக்கும் நாட்டின் தலைமை நீதிபதி தெங்க்கு மைமுன் தமது தீர்ப்பின் வாயிலாக மிகக்தெளிவாக சுட்டிக்காட்டினார்.

பெற்றோர் என்பது, தந்தை மற்றும் தாயார் என இரு பாலரையும் குறிப்பதாகும். இந்த இருவரும் ஒருமித்த கருத்தோடு அனுமதித்தால் மட்டுமே அவர்களின் 18 வயதுக்கு கீழ்பட்ட வயதுடைய குழந்தைகளை மதம் மாற்றம் செய்ய முடியும் என்பதை ஒரு பாலர் பள்ளி ஆசிரியையான M. இந்திகாந்தி வழக்கில் கூட்டரசு நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதிபதிகள் குழுவினர், மிகத் தெளிவான ஒரு நல்ல சட்டத் தீர்ப்பை வழங்கி இருப்பதை தலைமை நீதிபதி தெங்க்கு மைமுன் மேற்கோள்காட்டினார்.

சுமார் 12 ஆண்டுகளாக இதே போன்ற ஒரு சமய சிக்கலில் தள்ளப்பட்டு, பரிதவித்த இந்திகாந்தியின் வழக்கில் நாட்டின் உச்சநீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு, இன்னமும் நடப்பில் இருக்கும் பட்சத்தில் அதேபோன்ற சூழலை எதிர்நோக்கியுள்ள லோ சியூ ஹாங் – கின் மூன்று பிள்ளைகள் விவகாரத்திலும் இது பொருந்தும் என்று தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

தீர்ப்பை கேட்டு, உச்சிக்குளிர்ந்த லோ சியூ ஹாங், 16 வயதுடைய தனது இரட்டைப் பெண் பிள்ளைகள் மற்றும் 12 வயதுடைய மகன் ஆகியோரின் மதம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பெர்லிஸ் மாநில சமய இலாகா இனியும் தங்களுக்கு தொல்லைக்கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி தெங்க்கு மைமுன், இதர கூட்டசு நீதிமன்ற நீதிபதிகளான நளினி பத்மநாதன் மற்றும் அபுபக்கர் ஜெய்ஸ்- சுடன் இணைந்து விசாரணை செய்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்