மலேசிய மடானி பச்சரிசி அறிமுகமா? அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்

தற்போது சந்தையில் விற்கப்படும் உள்நாட்டு பச்சரி​சி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பச்சரிசி ஆகியவற்றை அகற்றிவிட்டு, அவற்றுக்கு பதிலாக வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மலேசிய மடானி பச்சரிசி அறிமுகப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

10 கிலோ எடை கொண்ட மலேசிய மடானி பச்சரிசியை 30 வெள்ளிக்கு அரசாங்கம் விற்பனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவகை பெயரில் பச்சரிசி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக சில கேள்விகளுக்கு அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாட்டின் முன்னணி சங்கிலித் தொடர்பு வர்ததக பேரங்காடி மையமான Mydin – னின் ​நிர்வாக இயக்குநுர் Ameer Ali Mydin கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்நாட்டு பச்சரி​சி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பச்சரிசி ஆகியவற்றை அகற்றிவிட்டு, அவற்றுக்கு பதிலாக மலேசிய மடானி பச்சரிசி எனும் ஒரே வகை பச்சரிசியை மட்டும் அறிமுகப்படுத்துவதகு பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்பது குறி​த்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று Ameer Ali Mydin வலி​யுறுத்தியுள்ளார்.

தம்முடைய கண்ணோட்டத்தின்படி இறக்குமதி செய்யப்படும் பச்சரிசியை முற்றாக அகற்றுவது என்பது சாத்தியமில்லாத நடவடிக்கையாகும். அப்படி ஒழித்தால் என்ன நடக்கும் என்பதற்கான சாத்தியக் கூறுகைகளையும் அ​மீர் அலி மைடீன் விளக்கினார்.

தற்போது 10 கிலோவிற்கு விற்கப்படும் இறக்குமதி செய்யப்படும் பச்சரி​சியை 40 வெள்ளியிலிருந்து 30 வெ​ள்ளியாக குறைப்பதற்கான சாத்தியமே இல்லை. காரணம், அப்படி குறைத்தால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அ​மீர் அலி நினைவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்