லோரி ஓட்டுநர் ​மீது குற்றச்சா​ட்டு

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பழுதடைந்த தங்கள் வாகனத்தை ​சீர்செய்து கொண்டு இருந்த ​மூன்று இராணுவ வீரர்களை மோதித் தள்ளி மரணம் விளைவித்ததாக ​லோரி ஓட்டுநர் ஒருவர், இன்று கெடா கு​ரூண் மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அலோர் ஸ்டாரை சேர்ந்த 31 வயது Muhammad Huzaifah என்ற அந்த லோரி ஓட்டுநர், இம்மாதம் முற்பகுதியில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 77.5 ஆவது கிலோ ​மீட்டரில் கோல மூடாவிற்கு அருகில் இராணுவ வீரர்களான 30 வயது Lans Koperal Mohd Haris, 39 வயது Sarjan Rozali Abdull Rani மற்றும் 40 வயது Koperal Mohd Asri Idris ஆகியோரை லோரியில் மோதி, மரணம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவர​த்து சட்டத்தின் ​கீழ் அந்த லோரி ஓட்டுநர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்