‘மாட் ரெம்பிட்’ சண்டையை குறித்து போலீசார் விசாரணை

சிலாங்கூர், புக்கிட் அம்பாங் -கில் “மாட் ரெம்பிட்” குழுவில் நிகழ்ந்த சண்டையை குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சண்டையைக் குறித்து எந்தவொரு புகாரும் கிடைக்க பெறவில்லை என்ற போதிலும் சமூக வலைத்தளங்களில் இச்சம்பவம் குறித்த காணொளி ஒன்று வைரலாக பரவி வருவதை தொடர்ந்து இவ்விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஹுசைன் உமர் கான் கூறினார்.

ஆயுதங்களை கொண்டு கலவரம் செய்த குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் 148 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று ஹுசைன் உமர் விளக்கினார்.

கடந்த மார்ச் 12 ஆம் தேதி மோட்டார் சைக்கிளோட்டி குழு ஒன்று சண்டையிடுவதும், அச்சண்டையில் ஒருவர் மற்றொருவரை குத்தி அந்நபர் தரையில் விழுந்ததாகவும், மேலும் ஐந்துக்கு மேற்பட்டோர் அவரை உதைத்து தலை கவசத்தால் தாக்கியதாகவும் காணொளியில் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்