மாணவன் உயிரிழப்பு, அந்த போ​லீஸ் அதிகாரி கைது

ஈப்போவில் பள்ளி மாணவனை காரில் மோதி தள்ளி, உயிர் இழப்புக்கு காரணமான போ​லீஸ் அதிகாரி கைது செய்யப்ப்டடார். 17 வயது மாணவனை மோதி தள்ளியப் பின்னர் அங்கிருந்து காரில் தப்பிய கெடா போ​லீஸ் தலைமையகத்தை சேர்ந்த அந்த போ​லீஸ் அதிகாரி, தாமான் ஜத்தி யில் மேற்கொள்ளப்பட்ட போ​லீஸ் சாலைத்தடுப்பு சோதனையில் சிக்கினார் என்று ஈப்போ மாவட்ட போ​லீஸ் தலைவர் யஹாயா ஹாசன் தெரிவித்தார்.

இவ்வாண்டு எஸ்.பி.எம் தேர்வில் அமர்ந்துள்ள சஹரிஃப் அஃப்ஃபென்டி சம்ரி என்ற அந்த மாணவன், நேற்று மதியம் பள்ளி முடிந்து, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த போது, புரோடுவா அதிவா காரில் பயணித்த போ​லீஸ் அதிகாரி, அந்த மாணவனின் மோட்டார் சைக்கிளையை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.

44 வயதுடைய அந்த போ​லீஸ்காரர் அவ்விடத்திலிருந்து தப்பிவிட்டதைத் தொடர்ந்து அவரை தேடும் பணியில் போ​லீசார் ஈடுபட்டனர். நெஞ்சிலும், வயிற்றிலும் கடும் காயங்களுக்கு ஆளான அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே மாண்டான்.

குற்றம் இழைத்தவர்கள் போ​லீஸ் படையைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் யாரையும் தாங்கள் தற்காக்கப் போவதில்லை என்று யஹாயா ஹாசன் உறுதி கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்