‘Allah’ சொல் கொண்ட காலுறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

கோலாலம்பூர், மார்ச் 19

‘Allah’ என்று சொல் கொண்ட காலுறைகள் விற்பனை செய்வதை குறித்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜொகூர் ரீஜண்ட் துன்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

‘Allah’ என்கிற வார்த்தை முஸ்லிம்களுக்கு புனிதமான ஒன்றாகும். அவற்றிற்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகளை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் இதுபோன்ற பிரச்னைகள் மீண்டும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று துன்கு இஸ்மாயில் சமூக வலைத்தளத்தின் மூலம் கேட்டுக் கொண்டார்.

இந்த பிரச்னையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் இதுக்குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் எவ்விதத்திலும் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்காமல் இருக்கும் என்று நம்புவதாக துன்கு இஸ்மாயில் தெரிவித்தார்.

சன்வே யிலுள்ள KK Mart -டில் விற்கப்படும் இந்த காலுறைகளின் புகைப்படங்கள் கடந்த புதன்கிழமை சமூக ஊடகங்களில் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதுக்குறித்து உள்துறை துணையமைச்சர் ஷாம்சுல் அன்வார் னசாராநேற்று நாடாளுமன்றத்தில் கிடைக்க பெற்ற 36 புகார்களை சமர்பித்ததை அடுத்து இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக துன்கு இஸ்மாயில் மேலும் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்