மாநாட்டில் இந்தியர்களும், சீனர்களும் பங்கேற்க வேண்டும்

விரைவில் நடைபெறவிருக்கும் பூமிபுத்ரா பொருளாதார காங்கிரஸ் மாநாட்டில் இந்தியர்களும், சீனர்களும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

சீனப்புத்தாண்டையொட்டி கோலாலம்பூரில் மலேசிய சீன வர்த்தகர்கள் மற்றும் தொழிலியல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், இந்த பொருளாதார மாநாடு, முந்தைய மாநாடுகளை விட மாறுப்பட்ட அணுகுமுறைகளை கொண்டு இருக்கும் என்றார்.

இந்த மாநாட்டில் இந்தியர்கள் மற்றும் சீனர்களின் பங்கேற்பை தாம் விரும்புவதாக பிரதமர் தெரிவித்தார். காரணம், பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டில் ஆற்றக்கூடிய உரைகள் மற்றும் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் யாவும் சிறு, நடுத்தர வர்த்தக தொழில் துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் இந்தியர்கள் மத்தியில் நிலவி வரும் ஏழ்மைப்பிரச்னைகளை களைவதற்கான நுணுக்கங்களை கண்டறிவதற்கான தளமாக இருக்கும் என்று பிரதமர் விளக்கினார்.

வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் இந்த பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டில் சுமார் மூவாயிரம் பேர் கலந்து கொள் வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்