மான் தலையை வைத்திருந்த நபருக்கு அபராதம்

சிராம்பான், மார்ச் 13 –

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மான் தலையையும் இறைச்சியையும் பதுக்கி வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓர் ஆடவருக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டப்பட்ட 53 வயதுடைய சொந்த தொழில் செய்பவர், நீதிபதி மஸ்னி னாவி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

அந்நபர் 1.4 கிலோகிராம் எடையுள்ள ஒரு மானின் தலை உட்பட இறைச்சியையும் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றத்திற்காக குறிப்பிடப்பட்ட அபராத தொகை வழங்கப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு குவாலா பீலா, கம்பூங் பாயா ரெங்கோ ஜோஹோல் லில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இக்குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்