73 குருமா பாக்கெட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்

பெலாபுஹான் கிள்ளாங், மார்ச் 13 –

இஸ்ரேலின் தயாரிப்புகள் என்று தெரியவந்துள்ள ‘Organic Jumbo Medjool Dates’ என்கிற 73 குருமா பாக்கெட்டுகளை மலேசிய சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

கிள்ளான் பகுதியை சுற்றியுள்ள கிடங்கில் 678 வெள்ளி மதிப்பிலான 14.6 கிலோகிராம் எடையுள்ள குருமாக்கள் கைப்பற்றப்பட்டதாக மலேசிய சுங்கத்துறையின் துணைத்தலைவர் டத்துக் சாசாலி மொகமாட் தெரிவித்தார்.

ஒரு வளாகத்தில் இஸ்ரேலின் தயாரிப்பான குருமாக்கள் விற்கப்படுவதாக காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதை தொடர்ந்து, நேற்று காலை 11:30 மணியளவில் சிலாங்கூர், மலேசிய சுங்கத்துறை அமலாக்கப் பிரிவினர்களால் அவ்விடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட குருமாக்களாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக சாசாலி மொகமாட் கூறினார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக 40 வயதுடைய உள்ளூர் வணிக உரிமையாளர் ஒருவர் விசாரணைக்கு உதவும் வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இன்று வடக்கு துறைமுகத்திலுள்ள மலேசிய சுங்கத்துறை அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்