வேப் விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை

ஜோகூர், மார்ச் 13 –

ஜொகூரில் வேப் வகை மின் சிகரெட்டை சட்டவிரோதமாக தொடர்ந்து விற்பனை செய்துவரும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இம்மாநிலத்தில் சாதனங்கள் மற்றும் திரவங்களை உள்ளிட்ட மின் சிகரெட் விற்பனைக்கான தடை, கடந்த 2016 ஆம் ஆண்டு முதலிருந்தே அமலில் இருப்பதாக மாநில வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி குழுவின் தலைவர் டத்துக் மொகமடாட் ஜாப்னி மொகமாட் ஷுகொர் தெரிவித்தார்.

மின் சிகரெட்களை தடைசெய்யும் மாநிலங்களில் ஜொகூரும் ஒன்றாகும். இருந்தபோதிலும், கடந்த ஆண்டு முழுவதும் வேப் விற்பனை தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக தனது தரப்புக்கு புகார்கள் வந்ததாக மொகமாட் ஜப்னி கூறினார்.

இம்மாநிலத்தில் மின் சிகரெட்டை விற்பனை புரியும் நடவடிக்கைகள் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநிலம் முழுவதும் உள்ள உள்ளூர் அதிகாரிகள், அதனை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்