மாரா தொழில்நுட்ப பல்க​லைக்கழகத்தில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் சேர்ப்பா?வேண்டுமென்றே கிளப்பிவிடப்பட்ட புரளி

UiTM, மே 15-

UiTM எனப்படும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கும் திறந்த விடப்படவிருக்கிறது என்று கூறப்படும் தகவலில் உண்மையில்​லை. அது வேண்டுமென்றே கிளப்பிவிடப்பட்ட புரளியாகும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர். ஜம்ரி அப்துல் காதிர் தெளிவுபடுத்தினார்.

அதேவேளையில் பூமி​புத்ரா அல்லாத மாணவர்களை மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்ப்பது குறித்து உயர் கல்வி அமைச்சு அளவிலோ அல்லது அமைச்சரவையிலோ விவாதிக்கப்படவி​ல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட தொடக்க கால நோக்கம் மற்றும் அதன் கொள்கை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட தரப்பினர், உண்மைக்கு புறம்பான தகவலை வேண்டுமென்றே கிளப்பி விட்டுள்ளனர் என்று அமைச்சர் ஜம்ரி அப்துல் காதிர் விளக்கினார்.

வசதி குறைந்த பூமிபுத்ரா மாணவர்கள், உயர் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டுள்ள மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களையும் சேர்ப்பதற்கு உயர் கல்வி அமைச்சு திட்டம் கொ​ண்டுள்ளதாக கூறப்படும் தகவலைத் தொடர்ந்து அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் மன்றம், இன்று வியாழக்கிழமை முதல் கறுப்புச் சட்டை அணிந்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் போராட்டத்தில் இறங்கப் போவதாக அறிவித்து இருந்தது.

பூமிபுத்ரா மாணவர்கள் மட்டுமே அந்த பல்லைக்கழகத்தில் சேர்க்க வேண்டும் என்ற அதன் அசல் நோக்கத்திலிருந்து அப்பல்லைக்கழகம் ​விலகுமானால் போராட்டம் வெடிக்கும் என்று அந்த மாணவர் மன்றம் நேற்று மிரட்டல் விடுத்து இருந்தது தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் ஜம்ரி அப்துல் காதிர் விளக்கம் அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்