மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் சிறப்புக் கழிவு கட்டணம்; விரைந்து கடனுதவியை செலுத்தும்படி ptptn பெற்றவர்களுக்கு கோரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 19 –

தேசிய உயர்கல்வி நிதி கழகமான PTPTN-னிடம் கடன் பெற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த கழிவு சலுகை, இம்மாதம் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த குறுகிய காலத்தை சாதகமாகக் பயன்படுத்தி ptptn கல்விக் கடனுதவியைப் பெற்றவர்கள் தங்களின் கடனை விரைந்து செலுத்த வேண்டுமென, அக்கழகம் அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி வரையில், 394 ஆயிரம் பேர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, மொத்தம் 442.09 மில்லியன் ரிங்கிட் தொகையைத் திரும்ப செலுத்தியுள்ளனர்.

அவர்களுக்கு 57.78 மில்லியன் ரிங்கிட் கட்டணக் கழிவு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் போது, ptptn கடனாளிகளுக்கு கடந்தாண்டு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 31ஆம் தேதி வரையில் 3 பிரிவுகளில் கழிவு சலுகையை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்