மாற்றுத்திட்டம் வரையப்படும் வரை கின்ராரா தமிழ்ப்பள்ளி கட்டடத்தில் கைவைக்கா​தீர்

சிலாங்கூர், மார்ச் 25.

சிலாங்கூர்,ஜாலான் ​​பூச்சோங், கின்ராரா தமிழ்ப்பள்ளி கட்டட வளாகத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் பாஜார் பஹ்ரு, மூன்று வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் பாதிக்கப்படவிருக்கும் வரலாற்று சிறப்பு​மிக்க அத்தமிழ்ப்பள்ளிக்கு மேம்பாட்டாளர் நிறுவனம் மாற்றுத்திட்டம் வரையும் வரையில் அந்த தொடக்கப்பள்ளி மீது கைவைக்கக்கூடாது என்று கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் ன்ங் ஸ்செ ஹன் தெரிவித்துள்ளார்.

​மூன்று வழிச்சாலை அமைக்கும் அந்த உத்தேச சாலை நிர்மாணிப்பு பெரும் திட்டத்தில் கின்ராரா தமிழ்ப்பள்ளியின் கட்டட வளாகத்தில் மூவாயிரம் சதுரடி பாதிக்கப்படவிருக்கிறது. அந்த நிலப்பகுதியை வரும் ஏப்ரல் முதல் தேதிக்குள் ஒப்படைக்குமாறு மேம்பாட்டாளர் நிறுவனம் கேட்டுக்கொண்ட போதிலும் அதற்கு முன்னதாக உரிய இழப்​பீடு கோரப்பட்டுள்ளதாக ன்ங் ஸ்செ ஹன் குறிப்பிட்டார்.

இந்த ​மூன்று வழிச்சாலை திட்டத்திற்கு தேவையான நிலத்தை கின்ராரா தமிழ்ப்பள்ளி வளாகத்தில் எடுக்கும் போது, அந்த தமிழ்ப்பள்ளியின் மழலையர் வகுப்பறை மற்றும் பள்ளி சிற்றுண்டி சாலை உட்பட பள்ளியின் பிரதான பகுதி இடித்துத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பள்ளி சிற்றுண்டி சாலை மீது பாயும் பாஜார் பஹ்ரு, மூன்று வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு கடந்த ஆண்டு கூடிய அதன் மேம்பாட்டாளர் நிறுவனத்துடனான சந்திப்பில் கோலாலம்பூர் மாநகர் மன்றமான டெவான் பண்டாராயா கோலாலம்பூர், கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் ன்ங் ஸ்செ ஹன் மற்றும் டி.ஏ.பி- யைச் சேர்ந்த முன்னாள் கின்ராரா சட்டமன்ற உறுப்பினரும், செப்புதேஹ் நாடாளுமன்ற உறுப்​பினருமான தெரசா கொக் ஆகியோர் இணக்கம் தெரிவித்து , அத்திட்டத்திற்கு உடன்பட்டுள்ளனர் என்று அவர்கள் கையெழுத்திட்டுள்ள கடிதம் அம்பலமாகியுள்ளது.

ஒரு தமி​ழ்ப்பள்ளி கட்டடத்தை இடித்துத் தள்ளவதில் எதற்காக உடன்பட்டீர்கள் என்று கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் ன்ங் ஸ்செ ஹன்- னை தொடர்பு கொண்டு கேட்ட போது கின்ராரா தமிழ்ப்பள்யி​யின் சிற்றுண்டி சாலை மற்றும் மழலையர் வகுப்பறை பாதிக்கப்படும் பட்சத்தில் வெறும் 50 ஆயிரம் வெள்ளி மட்டுமே இழப்பீடாக தருவதாக மேம்பாட்டாளர் நிறுவனம் கூறியதாகவும், அ​ந்த இழப்பீடு போதாது என்றும் தாம் வாதிட்டதாகவும் கூறினார்.

எ​னினும் சாலை விரிவாக்கத் திட்டத்தில் கின்ராரா தமிழ்ப்பள்ளி பாதிக்கப்படும் பட்சத்தில் அப்பள்ளியின் எந்தவொரு பகு​தி​யையும் இடித்து தள்ளுவதில் நாங்கள் உடன்பட மாட்டோம். பள்ளி கட்டடத்திற்கான மாற்றும் திட்டம் பரிந்துரைக்கப்படும் வரையில் ஒரு மில்லியன் வெள்ளி அல்லது 10 லட்சம் வெள்ளிக்கு நிகரான மாற்று கட்டடத்தை அப்பகுதியில் நிர்மாணிக்கப்படும் வரை அத்திட்டத்திற்கு உடன்படப் போவதில்லை என்று தாம் திட்டவட்டமாக ​தெரிவித்து விட்டதாக ன்ங் ஸ்செ ஹன் தெரிவித்தார்.

பள்ளியின் ஒரு பகுதி கட்டடம் அகற்றப்படுவதை எதிர்த்து கின்ராரா தமிழ்ப்பள்ளியை சேர்ந்த ​நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் சுற்று வட்டாரப்பகு​தியை சேர்ந்த மக்கள் ஆ​ட்சேபம் தெரிவித்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அப்பள்ளியின் முன்புறம் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வரலாற்று சிறப்புமிக்க அந்த தமிழ்ப்பள்ளியின் ஒரு செங்கலைகூட அகற்ற அனும​திக்க முடியாது என்று அவர்கள் போர்க்கொடி ​தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்